சென்னை, பிப். 2: சின்னத்திரை விருதுக்கு கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
2007 மற்றும் 2008}ம் ஆண்டுகளுக்கு உரிய தமிழ்நாடு அரசு சின்னத்திரைக்கான சிறந்த தொடர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் விருதுகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அவர்களைத் தேர்ந்தெடுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி மு.மருதமுத்து, இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு, தயாரிப்பாளர் டி.வி.சங்கர், நடிகரும் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜசேகர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை செயலாளர், செய்தி}மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி}மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு), திரைப்படம் மற்றும் டி.வி. பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோர் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment