தமிழில் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் முன்னிற்பது என்னவோ விஜய் டிவிதான். (04.10.09) ஞாயிற்றுக்கிழமை முதல், அவர்களது பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான ' கலக்கப்போவது யாரு ? ' நிகழ்ச்சியை அதே பெயரில் ஜுனியரை இணைத்து சிறுவர் நிகழ்ச்சியாகவும் தயாரித்து ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொடங்கியபோவது பலத்த வரவேற்புக்கிடைத்தது. ஆயினும் விரைவிலேயே அதே மாதிரியான நிகழ்ச்சிகள் ஏனைய தொலைக்காட்சிகளிலும் வரத் தொடங்கவே, இந்நிகழ்ச்சி சோர்வு கண்டது. அந்த நேரத்தில் அதிரடியாக சில சிறுவர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சிக்குப் புது மெருகு ஊட்டினார்கள். அந்த நம்பிக்கையிலோ என்னவோ தற்போது இந்தச் சிறுவர் நிகழ்ச்சியை தயாரிக்கின்றார்கள்.
நிகழ்ச்சியின் நடுவர்கள், நடிகர், இயக்குனர், பாண்டியராஜன் மற்றும் 'சன் டிவி -காமெடி டைம்' புகழ் அர்ச்சனா. சிறுவர் நிகழ்ச்சி எனப் பெயரிடப்ட்டிருந்தாலும், நிகழ்ச்சி அப்படியிருப்பதாகத் தெரியவில்லை. பங்கேற்கும் சிறுவர்களின் தகைமைகள் பாராட்டத்தக்க வகையில்தான் இருக்கிறது. ஆனால், சின்னத்திரை சுற்றிச் சுழலும் சினிமா உலகுள்ளேயே சிறுவர்களை மீண்டும் மீண்டும் அழைத்துச் செல்லப்படும் அவலம் தொடர்கிறது
Post a Comment