நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்தின் கேப்டன் டி.வி., வருகிற ஏப்ரல் மாதம் 14ம்தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. விஜயகாந்த் தே.மு.தி.க. என்ற கட்சியை தொடங்கியதைத் தொடர்ந்து தனது கட்சிக்கு என தனியாக டி.வி., சேனல் ஆரம்பிக்க இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து கேப்டன் டி.வி., தொடங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 14ம்தேதி முதல் கேப்டன் டி.வி., ஒளிபரப்பாக இருப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கேப்டன் டி.வி., லோகோவை வெளியிட்ட விஜயகாந்த், மார்ச்ச 15ம்தேதி முதல் ஏப்ரல் 13ம்தேதி வரை கேப்டன் டி.வி.,யின் சோதனை ஒளிபரப்பு தொடங்கும் என்றும் தெரிவித்தார். இந்த டி.வி.,யில் நெடுந்தொடர்கள், ஹாலிவுட் படங்கள், லேட்டஸ்ட் தமிழ் படங்கள், செய்திகள் என பெண்கள், குழந்தைகள், இளைஞர்களை கவரும் வகையில் பல பொழுதுபோக்கு அம்சங்களுடனான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளா
Post a Comment