சனிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் 150வது சிறப்பு விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது.
சனிக்கிழமைகளில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று 150 வாரங்களை எட்டியுள்ளது. இதனை சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தியது சன் டிவி.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் விருந்திரான டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் கலந்து கொண்டார். நகைச்சுவை நடுவர்களான மதன்பாபு - சிட்டிபாபு ஆகியோருடன் சேர்ந்து கே.எஸ். ரவிக்குமாரும் தனக்கே உரிய நகைச்சுவையுணர்வுடன் நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
Post a Comment