பரபரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் விஜய் டிவியின் அணு அளவும் பயமில்லை நிகழ்ச்சி இறுதிச் சுற்றை அடைந்துவிட்டது. இந்த வாரம் இறுதி சுற்றுப் போட்டி ஒளிபரப்பாக உள்ளது.
ஏழு சின்னத்திரை நட்சத்திரங்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், வாரம் ஒரு புது சாகசம், ஒருவர் நீக்கம் என்ற வகையில் வந்துக் கொண்டிருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட, பெண்களின் மனவலிமையை வலியுறுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஏழு பெண்களுடன் துவங்கிய போட்டியில், இறுதியாக ப்ரியதர்ஷினி, வந்தனா மற்றும் மஹாலட்சுமி ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இதில் மஹாலட்சுமி, ரீகால் சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது கூடுதல் தகவல்.
கிரேக் தொகுத்து வழங்கி வரும் அணு அளவும் பயமில்லை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி என்பதால் போட்டி மிகவும் தீவிரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இந்த வாரம் இறுதி சுற்றில், இதுவரை செய்யாத பல புதிய சாகசங்கள் இவர்களுக்கு தரப்பட உள்ளது. இறுதிப் போட்டியை இரண்டு கட்டங்களாக பிரித்து, இன்றும், நாளையும் (வெள்ளி சனி) ஒளிபரப்பப்படுகிறது. இதுவரை இவர்கள் எதிர்கொண்ட எல்லா சுற்றுகளும் இதில் இடம்பெறும் என்பது ஒரு புதிய தகவல். சுமார் 6 அடி குழியில் தலைகீழாக சென்று வழியில் தென்படும் கிரிஸ்ட்டல்களை எடுத்து வர வேண்டும். இரண்டாம் கட்ட இறுதி போட்டியில், 40 அடி நீளமான கயிற்றில் நடந்து புதியதொரு சாகசம் செய்ய வேண்டும். இதுப் போல பலதரப்பட்ட பலப்பரீட்சைக்கு இவர்கள் ஆழ்த்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
WD
இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எல்லா சவால்களையும் திறமையாகவும், கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்துக்குள் சிறப்பாக யார் செய்து முடிக்கிறாரோ அவரே சீசன் 2வின் வெற்றி மகுடத்தை சூடுவார். இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களின் மன வளத்தையும், தன்னம்பிக்கையையும் வளப்படுத்துவதாகவே அமைந்திருக்கும். போட்டியாளர்களை ஊக்கப்படுத்த அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறீப்பிடத்தக்கது.
இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் சுவாரஸ்யமான அணு அளவும் பயமில்லை சீசன் 2 இறுதி நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்! உங்களின் மனம் கவர்ந்த போட்டியாளர் வெற்றிப் பெறுகிறாரா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Post a Comment