பாட்டுப் போட்டி, நடனப் போட்டி என்று விதவிதமான போட்டிகளை போட்டி போட்டுக் கொண்டு அறிமுகப்படுத்தும் சின்னத்திரைகளின் போட்டியில் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் போட்டி நிகழ்ச்சி ராணி 6 ராஜா யாரு?
இந்த போட்டி நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் அழகிய ஆறு இளம் நாயகிகள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமாகத் திகழும் ஆறு அழகிய நாயகர்களுடன் ஜோடியாக இணைந்து ஆடுகின்றனர்.
போட்டிக்கு நடுவர்கள் என்று தனியாக யாரும் இல்லாமல் போட்டியாளர்களான நாயகர்களை, உடன் ஆடும் அழகிய ஆறு நாயகிகளே மதிப்பீடு செய்ய இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
Post a Comment